பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய சில்லறை வர்த்தக பேரவையினால் இந்த திருட்டு சம்பவங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஆரம்பமானதன் பின்னர் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் இவ்வாறு களவாட தொடங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.