Home இலங்கை இந்திய-இலங்கைக்கு இடையிலான தேசிய மின்சார இணைப்பு

இந்திய-இலங்கைக்கு இடையிலான தேசிய மின்சார இணைப்பு

by Jey

இந்திய-இலங்கைக்கு இடையிலான தேசிய மின்சார இணைப்பு திட்டம் குறித்த தொழில்நுட்ப அறிக்கை இந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இரண்டு மின் கட்டங்களையும் இணைக்கும் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து Power Grid Corporation of India Ltd (PGCIL) உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்போது, இலங்கைக்கும் ஏனைய பிராந்திய நாடுகளான வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளத்திற்னுமிடையில் இருதரப்பு மின்சார வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அபிவிருத்தி செய்வதற்கும், இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் உயர் திறன் கொண்ட மின்வலு இணைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

related posts