கிருஷ்ணகிரி பட்டாசு வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் இறந்துள்ளனர். 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, என்னை இங்கு அனுப்பி வைத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.