தினமும் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியால் ஏழை, நடுத்தர மக்கள் பிழைப்பு நடத்துவதே திண்டாட்டமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது.
தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி பழத்தை பறிக்கும் தொழிலாளிக்கு கூட கூலிகொடுக்க முடியாத அளவுக்கு தக்காளி விலை இருந்த நிலை மாறி, இன்று தங்கம்
போல் கிராம் கணக்கில் தக்காளி விற்பனை செய்யும் அளவுக்கு விலை சென்று விட்டது.
இந்த நிலையில், முதலில் தக்காளி விலை ரூ.60-ஆக இருந்த நிலையில், தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.