திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திலகரின் நினைவு நாளான (ஆகஸ்ட் 1-ந் தேதி) லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 41-வது திலகர் தேசிய விருது வழங்கும் விழா புனேவில் இன்று நடைபெற்றது. விழாவில் லோகமான்ய திலக் தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது
விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த விருதை பெறுவது எனது அதிர்ஷ்டம்.
இந்த விருதைப் பெற்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். நீங்கள் ஒரு விருதை பெறும்போது, உங்கள் பொறுப்பு இன்னும் அதிகரிக்கிறது.
இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். விருது தொகையை நமாமி கங்கை பணிக்கு வழங்குகிறேன்.