Home இலங்கை தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய பிரபல பாடகி

தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய பிரபல பாடகி

by Jey

தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல பாடகி உமாரா சிங்கவன்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய உமாரா சிங்கவன்சவிடம் இன்றைய தினம்(02.08.2023) விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடரில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அரச நிர்வாக மற்றும் சுதேச விவகார அமைச்சிக்கு உமாரா இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் உமாராவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள உள்ளது.

related posts