ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூர்-மும்பை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அதிகாலை 5 மணியளவில் மராட்டியத்தின் பஹல்கர் மாவட்டம் அருகே ரெயில் வந்தபோது ரெயிலில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் சேத்தன் சிங் (வயது 33) தனது உயர் அதிகாரி மற்றும் 3 பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
சேத்தன் சிங் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரெயில்வே பாதுகாப்புப்படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா, பயணிகள் அப்துல் குவாதிர்பாய் முகமது ஹுசன், அக்தர் அப்பாஸ் அலி, சதர் முகமது ஹுசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பியோட முயற்சித்த சேத்தன் சிங்கை சக வீரர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சேத்தன் சிங் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.