இந்திய அணியின் அதிரடி வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக நீண்ட நாட்களாக எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களிலும் விளையாடவில்லை.
நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் கே.எல்.ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்தார்.
பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. கே.எல்.ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.