கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ விவாகரத்து செய்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டு திருமண வாழ்வின் பின்னர் இவ்வாறு பிரிவதற்கு தீர்மானித்துள்ளனர். அர்த்தபூர்வமானதும், கடினமானதுமான உரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதை காணப்படுவதகாவும் ஆழமான அன்பு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளின் நலனைக் கருத்திற் கொண்டு தங்களது தனியுரிமையை மதிக்குமாறு ட்ரூடோ தம்பதியினர் கோரியுள்ளனர்.
விவகாரத்திற்கான ஆவணங்களில் ட்ரூடோ தம்பதியினர் கையொப்பிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அடுத்த வாரம் இருவரும் ஒன்றாக விடுமுறையை கழிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.