Home இலங்கை 13 திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி

13 திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி

by Jey

அரசமைப்பின் 13 திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

13ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார்

இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுன அதிருப்தியில் இருப்பதாகவும், ஜனாதிபதியின் உரையின் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்திற்கு முன்னர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துள்ளார்.

இதன்போது 13ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் இன்றி ஏனைய அதிகாரத்துடன் முழுமையாகச் செயற்படுத்துவது தொடர்பில் கூறியிருந்தார்.

related posts