அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபாவால் தொற்றால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்காவின் நெவாடா பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுவன் இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு வைத்தியர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளை தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மூளையை உண்ணும் அமீபா என குறிப்பிடப்படும் Naegleria fowleri தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளமையை உறுதி செய்யப்பட்டுள்ளது.