Home இலங்கை இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறையின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு

இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறையின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு

by Jey

இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறையின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் போது இடம்பெற்ற குறுகிய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு அறிவித்ததையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

கப்பல் துறையில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள பிரான்ஸ், இலங்கையில் முதலிட அந்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாடுகளை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளை இன்றைய மாலை நேர பிரதான செய்திகளில் எதிர்பார்க்கலாம்.

 

 

 

 

 

 

related posts