கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை நேற்று(08.08.2023) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கிழக்கு ஆளுனர் சந்தித்துள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமிர்த்தம் சம்மந்தனை சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.