Home கனடா கனடாவில் ராப் இசைக் கலைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கனடாவில் ராப் இசைக் கலைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

by Jey

கனடாவைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் டோரி லானேஸுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாடகி மேகன் தி ஸ்டாலியன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் டோரி லேன்ஸுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 11, 2020 அன்று நடைபெற்ற ஒரு விருந்தில் நடந்த வாக்குவாதத்தின் போது, ​​டோரி லானெஸ், மேகன் தி ஸ்டாலியனை காலில் சுட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது, ​​தாக்குதல் பற்றி ஒரு அறிக்கையை வழங்காமல் இருக்க லானேஸ் மேகனுக்கு $1 மில்லியன் கொடுக்க முயன்றதாக மேகன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டோரி லானெஸ் தெரிவித்துள்ளார்.

related posts