18 ஆண்டுகளான திருமண வாழ்க்கை நிறைவுக்கு வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ -சோபியா தம்பதியினர் அறிவித்திருந்தனர்.
இவ்வாறான ஒர் பின்னணியில் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் ஒரு வார காலம் விடுமுறையை கழிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ட்ரூடோ, அவரது குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் விடுமுறையை கழிக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டாலும் பிரதமர் ட்ரூடோ, விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.