டொரன்டோவில் கடந்த ஆண்டு 1316 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 ஆம் ஆண்டை விடவும் 39 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நாய்கள் கடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாய்களை வளர்ப்போருக்கு, நாய்களை கட்டி வளர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாய்களை கட்டி வளர்க்காத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு 365 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.