Home இந்தியா அய்யனார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள்

அய்யனார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள்

by Jey

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இதற்காக கடந்த 2 நாட்களாக பக்தர்கள் குடும்பத்துடன் சாரை சாரையாக வண்டிகளில் கோவிலுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர்.

மேலும் பக்தர்களை பாபநாசம் சோதனை சாவடியிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து பின்னர் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வனத்துறை மற்றும் காவல் துறையினர் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே குடில்கள் அமைத்து தங்கியிருந்த பொதுமக்களை இங்கு தங்க அனுமதி இல்லை என்று கூறி அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

 

 

related posts