கனடாவில் தேசிய கீதத்தின் வரிகள் தொடர்பில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது.
ஆங்கிலம் பேசும் கனடியர்கள் மத்தியில் தேசிய கீதத்தின் வரிகள் தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
“ஓ கனடா” என்னும் தேசிய கீதத்தின் வரிகளை மாற்றி அமைப்பது தொடர்பில் இவ்வாறு முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரபல ஆய்வு நிறுவனமான ரிசர்ச் கோ என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
41 வீதமான அங்லோபோன் கனடியர்கள் “எங்கள் வீடு மற்றும் தாய்நிலம்” என்ற வரிகளை “எங்கள் வீட்டின் தாய்நிலம்” என மாற்றுவதற்கு ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
எனினும் 44 வீதமானவர்கள் இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆங்கில மொழி பேசும் கனடியர்கள் அதிகளவில் தேசிய கீதத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.