Home இந்தியா ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Jey

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021-க்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் துரதிருஷ்டவசமான விளைவுகள் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து,

நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் வழங்கிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டுமென்றும், நுழைவுத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டின் கருத்தாக உள்ளது.

related posts