Home இலங்கை மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

by Jey

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம் மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று (15.08.2023) கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும்.

இந்த திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனை பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது.

 

 

 

 

related posts