Home உலகம் ஈரானில் உள்ள ஷா செராக் கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதல்

ஈரானில் உள்ள ஷா செராக் கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதல்

by Jey

ஈரானில் உள்ள ஷா செராக் கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், 7 பேர் காயமடைந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிராசில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில்,

துப்பாக்கி ஏந்திய ஒருவர் ஷா செராக் ஆலயத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்தது.

இச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

related posts