மெக்சிகோவில் சினாலோவா போதை மருந்து கடத்தல் குழுவினரை சேர்ந்த சமையல்காரர் என அறியப்படும் ஒருவர் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த சினாலோவா குழுவானது உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பு என அறியப்படுகிறது.
இந்த குழு கடந்த 1980களில் இருந்தே மெக்சிகோவில் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலமாக சமையல்காரர் என அறியப்படும் Santiago Meza Lopez என்பவர் சிக்கினார்.
இவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மொத்த அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினாலோவா குழு கடத்தி கொலை செய்யும் பெரும்பாலான சடலங்களை இவர் அமிலத்தில் கரைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
1996ல் பண்ணை ஒன்றில் பணியாற்றியபோது சடலங்களை அமிலத்தில் கரைக்கும் செயலை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.