யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிக்கு தொலைபேசி வழங்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளதோடு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளை பரிசோதனை செய்த போது அந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் கைதிக்கு தொலைபேசி வழங்கியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு சிறைச்சாலை அதிகாரியினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் உத்தியோகத்தரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.