Home இந்தியா கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம்

கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம்

by Jey

அற்புதமான கற்சிலைகளை வடிப்பவர்களாக இருக்கலாம், ஓவியங்களை வரைபவர்களாக இருக்கலாம், பனை ஓலைகளைக் கொண்டு அழகான பொருட்களை உருவாக்குபவர்களாக இருக்கலாம். இத்தகையவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம்.

வண்ண ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ்பூருக்கு வருகை தந்தநிர்மலா சீதாராமன், செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

“சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். பட்ஜெட்டில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம்.

இந்தத் திட்டம் குறித்து சில பகுதிகளில் சில கருத்துகள் உலா வரலாம். ஆனால், இந்தியாவின் கைவினைத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம்.

related posts