கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், பணிக்காலங்களில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:- காலிப்பணியிடங்கள் நமது மாநிலத்தில்தான் குக்கிராமங்களுக்கு கூட பஸ்வசதி உள்ளது
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
100 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
மேலும் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வர உள்ளன. அரசு பஸ்சின் மஞ்சள் நிறமும், பள்ளி வாகனங்களுக்கான மஞ்சள் நிறமும் வேறு, வேறாக இருக்கும்.
மகளிர் கட்டணமில்லா பஸ்சில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது.