Home இலங்கை 13ஆம் திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடப்போவதில்லை

13ஆம் திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடப்போவதில்லை

by Jey

மாகாண முறையொன்றை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் திட்டத்தில் இருந்தது. ஆனால் பிளவுபடாத நாடொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜே,ஆர்.அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு மாகாணசபை முறையை முழு நாட்டுக்கும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் சட்டம். அதன் மீது சத்தியப்பிரமாணம் செய்தே அனைவரும் நாடமாளுமன்றத்திலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இருக்கின்றனர்.

மாகாணசபை வரப்பிரசாதங்களை மக்கள் பிரதிநிதிகள் மாத்திரம் அனுபவிக்காமல் இலங்கை மக்களும் அதனை அனுபவிக்க வேண்டும். அதனாலே அதனை செயற்படுத்த முயற்சிக்கிறோம்.

அத்துடன் 13ஆம் திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடப்போவதில்லை. நாடு பிளவுபடாமல் இருப்பதற்காகவே ஜே.ஆர்.இந்திய இலங்கை திம்பு கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்கு சென்று கலந்துரையாடிய பின்னர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.

வடக்கு – கிழக்கு பகுதிக்கு மாகாண முறையொன்றை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் திட்டத்தில் இருந்தது. ஆனால் பிளவுபடாத நாடொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜே,ஆர். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு மாகாணசபை முறையை முழு நாட்டுக்கும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

அதேபோன்று ரணில் விக்ரமசிங்க நோர்வேயில் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பிரபாகரன் ஆயுத்தை கீழே வைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அது சட்டம் அல்ல. அந்த ஒப்பந்தம் இன்று நூலகத்திலேயே இருக்கிறது.

 

 

 

 

related posts