Home இந்தியா புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி

புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி

by Jey

புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்தவரின் நண்பரை கடத்திய 5 பேரை அம்மாபேட்டை அருகே வாகன சோதனையில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கதிரவன். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (வயது 35), கோவிந்தராஜ் (36), சபியுல்லா (30), குட்டூரை சேர்ந்தவர் பிரபு (29), செம்படம்புத்தூரை சேர்ந்தவர் ராமசந்திரன் (36). இந்த நிலையில் இவர்கள் 5 பேரிடம் கதிரவன் புதையல் எடுத்து தருவதாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.35 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் புதையல் எடுத்து கொடுக்காமலும், ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்த 5 பேரும் கதிரவனிடம் ரூ.35 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருப்பூர் மாவட்ட போலீசார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் அளித்தனர்.

மேலும் கிருஷ்ணகிரிக்கு பவானி வழியாக செல்லக்கூடும் என்பதால் அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் அம்மாபேட்டை அருகே மேட்டூர் செல்லும் வழியில் உள்ள சின்னப்பள்ளம் சோதனைச்சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

related posts