Home உலகம் லண்டன் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட விலைமதிப்புமிக்க பொருட்கள்

லண்டன் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட விலைமதிப்புமிக்க பொருட்கள்

by Jey

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இங்கு கி.மு. 15-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு
அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் இதனை பார்வையிடுகின்றனர்.

இந்தநிலையில் தற்போது அருங்காட்சியகத்தில் நடத்திய ஆய்வின்போது சில விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஆனால் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கண்காட்சியின்போது இவை திருடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்து அருங்காட்சியகத்தின் தலைவர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

மேலும் திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

related posts