Home இலங்கை தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவாக மீளாய்வு – ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவாக மீளாய்வு – ஜனாதிபதி

by Jey

தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவாக மீளாய்வு செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பூசா கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார மாற்றங்கள் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மீளாய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நவீன பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக பொருளாதார மேம்பாடுகள் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட காரணிகளையும் உள்ளடக்கி தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளை ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சன்ன குலத்திலக்க தலைமையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts