பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் கெலவ்னா பகுதியில் நிலவிவரும் காட்டுத்தீ காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு கெலவ்னா நகரின் வீடுகள் பல காட்டு தீயினால் தீக்கிரையாகியுள்ளன.
மாகாணம் தழுவிய அடிப்படையில் அரசாங்கம் இந்த அறிப்பினை வெளியிட்டுள்ளது.
மாகாணம் முழுவதிலும் நிலவிவரும் காட்டுத்தீ அனர்த்த நிலை காரணமாக அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண முதல்வர் டேவிட் எபி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களை விடவும் இந்த ஆண்டில் கனடாவில் காட்டுத் தீ அனர்த்தம் அதிகமாக காணப்படுகின்றது.