காட்டுத் தீ பரவும் நிலைமைகளினால் செய்தி தடையை தளர்த்துமாறு கனடா மெட்டா நிறுவனத்திடம் கோரியுள்ளது.
கனடிய மரபுரிமைகள் அமைச்சர் பாஸ்கேல் சென்ஓஞ்ச் இதனைத் தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீ காரணமாக நாடு பாதிப்புக்களை சந்தித்து வரும் நிலையில் செய்திகளுக்கு தடை விதிப்பது பொறுப்பற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு சமூக ஊடகங்களிலும் செய்திகளை பகிர்ந்து கொள்ள கனடியர்களுக்கு அனுமதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களின் வாயிலாக மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுக்கடந்தா காட்டுத் தீ தொடர்பில் சமூக ஊடகங்களில் கூடுதல் அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இது ஆபத்துக்களை வரையறுக்க உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.