Home இந்தியா இலவச வீடு கேட்டு திருநங்கைகள் ஒப்பாரி போராட்டம்

இலவச வீடு கேட்டு திருநங்கைகள் ஒப்பாரி போராட்டம்

by Jey

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு கேட்டு திருநங்கைகள் ஒப்பாரி வைத்து முற்றுகை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை, செங்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் இணைந்து வசித்து வருகின்றனர்.

பெரும்பாலான பகுதிகளில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தமிழ்நாடு அரசின் இலவச வீடு கேட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். சுமார் 200 முறைக்கு மேல் மனு அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பெரிய வீட்டு தலைவி ராதிகா நாயக், சின்ன வீட்டு தலைவி ஜீவா நாயக் ஆகியோர் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

related posts