Home இலங்கை முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் ……

முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் ……

by Jey

முல்லைத்தீவு – குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நான் கூறப் போகும் கருத்துக்கள் வழக்குகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவே அமையலாம் என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயார்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறப்போகும் கருத்துக்கள், அந்த வழக்குகளுக்கு சாதகமாவோ பாதகமாகவோ கூட மாறலாம்.

எனவே, வழக்கு விசாரணைகள் இடம்பெறும் ஒரு விடயம் தொடர்பாக என்னால் நாடாளுமன்றில் கருத்து கூற முடியாது.

related posts