அமெரிக்கா இராணுவத்துடன் இணைந்து தென்கொரியா இராணுவம் அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சிகள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது.
இதற்காக ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள அமெரிக்க இராணுவம் தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தோடு ஒப்பந்தமிட்டுள்ளது.
இந்த நிறுவனமானது இரு நாடுகளுக்கும் உகந்த வகையில் இராணுவ பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் அங்கு பணிபுரியும் நிறுவன ஊழியர்கள் சிலருக்கு மின்னஞ்சல் வழியாக இரகசிய குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த நிறுவனத்தின் தரவுகள், அறிக்கைகள் ஆகியவை திருடப்பட்டதாக முறைபாடுகள் எழுப்பட்டுள்ளன.
இதனைத்தொர்ந்து புலனாய்வு பொலிஸார் நடத்திய விசாரணையில், ஊடுருவலுக்கு காரணமாக வடகொரியாவின் ‘கிமுசுகி’ என்னும் ஹேக்கர் கும்பல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.