இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் இலங்கையில் இதய நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 166–170 பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
தினமும் நோயாளர்களைப் பரிசோதிக்கும் போது மேல் மாகாணத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளும் எங்களிடம் இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அந்த தரவுகளைப் பார்க்கும் போது கடந்த காலங்களில் இதயநோய்களின் போக்கு அதிகரித்து வருவதைக் காணலாம்.” என கூறியுள்ளார்.