இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் இந்த தடை நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கைக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் ஸ்ட்ரோ, கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியாப்ப தட்டுகள் அதில் அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.