பிரான்ஸில் விமான நிலையம் ஒன்றின் பெயர் பிரிட்டனின் காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் அரசியாரின் பெயருக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
பிரான்ஸின் வடபகுதியில் உள்ள Le Touquet என்ற ஊரைச் சேர்ந்த அதிகாரிகள் அதற்காக மன்னரிடமிருந்து அனுமதி பெற்றுவிட்டனர்.
தற்போதைய பெயர் Touquet-Paris-Plage விமான நிலையம் என உள்ள நிலையில், அது Elizabeth II Le Touquet-Paris-Plage அனைத்துலக விமான நிலையம் என மாற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அந்த மாற்றம் எப்போது செய்யப்படும் என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. சென்ற ஆண்டு இரண்டாம் எலிசபெத் அரசியார் காலமாகி 6 நாள்களுக்குப் பின்னர் பெயர் மாற்றுவதற்கான பரிந்துரை செய்யப்பட்டது.
பிரான்ஸில் உள்ள உல்லாசத்தலங்களில் பிரிட்டனின் அம்சங்களை ஆக அதிகமாகக் கொண்டது Le Touquet என்பதால் அரசியாருக்கு அவ்வாறு மரியாதை செலுத்த விரும்புவதாக நகர மன்றம் தெரிவித்தது.
அதேவேளை பிரிட்டனைச் சேர்ந்தோரை வரவேற்பதற்காக 1930களில் குறித்த விமான நிலையம் கட்டப்பட்டது. மேலும் இந்த பெயர் மாற்றத்தால் அந்த ஊருக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான தொடர்பு வலுவடையும் என்றும் கூறப்படுகின்றது.