கனடிய மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணம் மற்றும் வடமேற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ நிலைமைகள் குறித்து தனது மனைவி கமீலாவும் தானும் மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் மன்னார் சார்ள்ஸ் தனது கவலையை கனடிய மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கோடை காலத்தில் கனடிய மக்கள் பல்வேறு நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய காட்டுத் தீ அனர்த்தங்கள், வளி மாசடைதல் குறைதல், புயல் மழைவெள்ளம் என பல்வேறு காரணிகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.