Home இலங்கை நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் – கரு ஜயசூரிய

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் – கரு ஜயசூரிய

by Jey

நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுக்கக்கூடிய செயற்பாடுகளுக்கு வெறுமனே வார்த்தையில்கூட ஒத்துழைப்பு வழங்கவேண்டாமென வலியுறுத்துகின்றோம் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலங்களில் இலங்கையின் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுவருவது குறித்து நாம் மிகுந்த மனவேதனை அடைகின்றோம். அதேவேளை நாட்டின் சமாதானத்துக்கும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்கவேண்டாம் என்று நாட்டுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இலக்காகாமல் செயற்படவேண்டும்
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுக்கக்கூடிய செயற்பாடுகளுக்கு வெறுமனே வார்த்தையில்கூட ஒத்துழைப்பு வழங்கவேண்டாமென வலியுறுத்துகின்றோம்.

ஆன்மீக போதனைகளை அடிப்படையாகக்கொண்டிருக்கும் மார்க்கங்கள் மகத்துவமாகக் கருதும் அனைத்து மதச்சின்னங்களும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான புனிய சொத்துக்களாகும்.

அவை குறித்தவோர் இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ சொந்தமான பௌதிக வளங்கள் அல்ல என்பதை நாமனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதுமாத்திரமன்றி தொல்லியன் பெறுமதியுடைய சின்னங்கள், கட்டமைப்புக்களை ஒட்டுமொத்த சமுதாயத்துக்குப் பெருமை சேர்க்கும் உலக மரபுரிமைகளாகக் கருதவேண்டும்.

நாடொன்றின் பெருமை அல்லது மதத்தின் மகத்துவம் என்பன அவற்றின் ஊடாக உலகுக்குக் கிட்டும் நன்மைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.

ஆனால் அந்த மகத்துவம் அடிப்படைவாத, ஆதிக்க சிந்தனையுடைய செயற்பாடுகளால் இழிவுபடுத்தப்படுகின்றது. எனவே தமது நாடு மற்றும் மதத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டவர்கள் அனைவரும் அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இலக்காகாமல் செயற்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

related posts