‘பிடே’ உலகக் கோப்பை செஸ் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் டைபிரேக்கர் சுற்று அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
போட்டியின் முதலாவது சுற்று 35 வது நகர்த்தலின் பின் சமநிலையில் முடிந்தது.
இறுதிப்போட்டியின் 2-வது சுற்று
இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை சமநிலையில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.
இதன்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. சமநிலையில் ஆட்டம் முடிவுற்றதன் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது.
டைபிரேக்கர் சுற்று
இரு ஆட்டத்தையும் சேர்த்து இரு வீரர்களும் 1-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் ஆட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.