பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த விரிவுரையாளர்களில் 26 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 600 பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதன் உப தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் சுமார் 10 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் பல்கலைக்கழகங்களின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.