Home உலகம் நைஜர் நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்…

நைஜர் நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்…

by Jey

நைஜரில் கடந்த மாதம் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது.

இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி புதிய அதிபராக பதவியேற்றார்.

ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

இதற்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் பதிலடி கொடுத்ததுடன், தங்கள் நாட்டை தங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும் என கூறினர்.

அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா பாசோ ஆகிய நாடுகள் புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. பாதுகாப்பிற்காக மாலி மற்றும் பர்கினா பாசோவில் இருந்து படைகளை வர நைஜர் அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில், நைஜர் நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதர் சில்வெயின் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ராணுவ தலைமை உத்தரவிட்டுள்ளது.

நைஜர் நாட்டின் நலன் கருதி வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த கூட்டத்தை பிரான்ஸ் தூதர் புறக்கணித்ததாகவும், நைஜரின் நலன்களுக்கு முரணாக பிரெஞ்சு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.

related posts