முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (26.08.2023) அதிகாலை 04.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாற்று வலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.