கனடாவில் காட்டுத் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சக மக்களுக்கு உதவி வரும் ஒரு டாக்ஸி சாரதி பற்றிய தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
எலோ நைஃப் பகுதியைச் சேர்ந்த அப்துல் காரின் ஷாலு என்ற டாக்ஸி சாரதியே இவ்வாறு சக மக்களுக்கு உதவி வருகின்றார்.
காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்து நிற்கும் மக்களில் அப்துல் காரிமும் ஒருவர், எவ்வாறினும் டாக்ஸி சாரதியான காரியம் ஏனைய மக்களுக்கு இலவசமாக டாக்ஸி சேவையை வழங்கி வருகிறார்.
பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதற்கு தனது டாக்ஸியை இலவசமாக வழங்கி வருகின்றார்.
அனைவரும் சகோதர சகோதரிகள் எனவும் இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவுவது தமது கடப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக அமைப்புக்கள் அரசாங்கம் என்பன இந்த மக்களுக்கு உதவி வருகின்ற போதிலும் சில விடயங்கள் இந்த மக்களுக்கு தேவைப்படுவதாகவும் அதில் ஓர் அங்கமாக போக்குவரத்து சேவையை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.