வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் அன் இருந்து வருகிறார். அந்நாட்டில், அடிக்கடி அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்யப்படுவது வழக்கம். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனினும், அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.
இந்நிலையில், அதன் தலைநகர் பியாங்யாங் நகரில் சமீபத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இது, கிம் ஜாங் அன்னை கொலை செய்ய முயற்சி என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், தன்னுடைய பாதுகாப்பு பற்றி கிம் ஜாங் கவலை கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கிம் ஜாங்கின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவானது. இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன சாதனங்கள் இறக்குமதியாகி உள்ளன.