Home இந்தியா விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஷபா யாத்ரா என்ற பெயரில் யாத்திரை

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஷபா யாத்ரா என்ற பெயரில் யாத்திரை

by Jey

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31ம் தேதி இந்து மத அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஷபா யாத்ரா என்ற பெயரில் யாத்திரை நடத்தியது.

இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக கொண்ட நூ மாவட்டத்தின் முக்கிய பகுதியில் யாத்திரை வந்த போது யாத்திரை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இது இரு தரப்பு வன்முறை வெடித்தது. வன்முறையில் வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நூ மாவட்டத்தில் தொடங்கிய இந்த வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.

டெல்லி அருகே உள்ள குருகிராமிலும் வன்முறை பரவியது. இந்த வன்முறை சம்பவங்களில் 2 போலீசார் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கடந்த 31ம் தேதி தடைபட்ட ஷபா யாத்திரை மீண்டும் நடத்தப்படும் என விஷ்வ இந்து பரிஷத்தின் கிளை அமைப்பான சர்வ் ஜதிய இந்து மகாசபா கடந்த 13ம் தேதி நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தடைபட்ட ஷபா யாத்திரை 28ம் தேதி (இன்று) நடைபெறும் என விஷ்வ இந்து அமைப்பு தெரிவித்தது.

related posts