Home இந்தியா “இந்தியாவின் இந்த அழகிய பகுதியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது

“இந்தியாவின் இந்த அழகிய பகுதியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது

by Jey

டெல்லி திரும்பிய, உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா, செய்தியாளர்களிடம் “இந்தியாவின் இந்த அழகிய பகுதியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்கள் காஷ்மீர் குறித்து பேசினோம். மிகவும் அழகிய இயற்கை காட்சிகள் இருக்கும் என எனக்கு தெரியும்.

ஆனால், நான் இன்று பார்த்தது என் மனதை திகைப்படைய செய்துவிட்டது. அனைவரும் எங்களை அன்புடன் வரவேற்றனர்.

ஆகையால்,140 நாடுகளையும், என் நண்பர்கள், குடும்பத்தினரையும் இந்தியாவிற்கு அழைத்துவந்து, காஷ்மீரை காண்பிக்க நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நம்பமுடியாத ஒரு சாதனை. இதற்காக இந்தியா மிகவும் பெருமைப்பட வேண்டும்.

இதேபோல், இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாடு, ஒரு அற்புதமான வாய்ப்பு.

உலகத் தலைவர்கள் இங்கு வந்து, காலநிலை மாற்றம் உள்பட நமது பூமியை பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள். இதன்மூலம், நாம் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை முடிவு செய்யலாம்.

 

related posts