கனடாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கடவுச்சீட்டு குறித்து கனேடிய மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கனேடிய கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட சில தினங்களிலேயே அக்கடவு சீட்டு சுருண்டும் விரிந்தும் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்கடவு சீட்டுக்கு முன்பு இருந்த கடவுச்சீட்டில் இவ்வாறான ஒரு பிரச்சனை காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
புதிய கடவுச்சிட்டானது காலநிலை காரணிகளின் அடிப்படையில் சுருண்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ள முறையின் அடிப்படையில் இவ்வாறு சுருள்வதாக கனடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடிவரவு முகவம் தெரிவித்துள்ளது.