Home கனடா கனடாவில் விபத்துக்கள் மூலம் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

கனடாவில் விபத்துக்கள் மூலம் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

by Jey

கனடாவில் விபத்துக்கள் மூலம் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு கனடிய மக்களின் ஆயுட்காலத்திலும் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கனடாவில் ஆண்களின் மரண வீதம் ஒரு வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கனேடிய மக்களின் இறப்பு வீதம் ஒரு வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்று ஆகிய ஏதுக்களினால் இவ்வாறு அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021 ஆம் ஆண்டில் மரண வீதமானது ஒரு வீதத்தினால் அதிகரித்துள்ளது. விபத்துக்கள் மூலமாக மரணங்களின் எண்ணிக்கை 14.5 வீதமாக பதிவாகியுள்ளது.

related posts