நாளைய தினம் சுப்பர் புளூ மூன் எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம்.
ஆனால், ப்ளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம்.